பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானிய இளம்பெண்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து பிரான்ஸ் செல்லும் விமானத்தில் சாண்ட்விச் சாப்பிட்ட இளம் பெண் ஒவ்வாமையால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் British Airways நிர்வாகம் தகுந்த பதிலை தர வேண்டும் என மரணமடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்தன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரத்திற்கு British Airways விமானத்தில் பயணமாகியுள்ளார் 15 வயதான Natasha Ednan-Laperouse.

புறப்படும் முன்னர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அவருக்கு பிடித்தமான சாண்ட்விச் ஒன்றையும் சாப்பிடுவதற்காக வாங்கிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இளம் பெண் நடாஷா ஒவ்வாமையால் அவதிப்பட்டுள்ளார்.

நடாஷாவின் தந்தை Nadim, புல்ஹாம் பகுதியில் Wow Toys என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மகளின் நிலை கண்டு அவதிப்பட்ட அவர் இருமுறை மருந்து அளித்துள்ளார். இருப்பினும் நடாஷாவின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதனையடுத்து நைஸ் நகரில் சென்றடைந்தது அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நடாஷா மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடாஷா சாண்ட்விச் வாங்கிய கடையில் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தமது மகளின் மரணம் தொடர்பில் British Airways நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாதிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்