லண்டனில் துப்பாக்கிசூடு... அடுத்தடுத்து நடந்த சோக சம்பவங்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கிழக்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டன் பகுதியில் Vallentin சாலை அருகே நேற்று 11மணியளவில்(உள்ளூர் நேரப்படி) துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு அவருடைய நண்பர்கள் வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் 11.38 மணியளவில் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல வடக்கு கிழக்கு லண்டன்.பகுதியில் நேற்று நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில் 20 வயதுள்ள இளைஞர் பரிதாபமாக பலியானதோடு, 17 மற்றும் 24 வயதுள்ள இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த சோக சம்பவங்களால் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்