இளவரசி டயானா இறக்கும்போது 9 வார கர்ப்பிணியா? மருத்துவர் வெளியிட்ட தகவல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
284Shares
284Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசி டயானா கார் விபத்தில் பலியான போது கர்ப்பமாக இருந்தாரா என்ற பொதுமக்களின் கேள்விக்கு, மருத்துவர் Richard Shepherd தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதியன்று பாரிஸ் நகரில் நேர்ந்த கார் விபத்தில் பலியாகினார். அவருடன் சேர்ந்து விபத்தில் காதலன் Dodi Fayed-ம் பலியாகினர்.

அவருடைய விபத்து பற்றி பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் பொதுமக்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது.

மேலும் டயானா இறந்த சமயம் Dodi-ன் தந்தை Mohamed Al Fayed, அந்த விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு டயானா கர்ப்பமாக இருப்பதாக என்னிடம் போனில் தெரிவித்தார் என சர்ச்சையை கிளம்பினார்.

அதேபோல 2007-ம் ஆண்டு பிரெஞ்சு புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர், விபத்து நடந்த பொழுது டயானா கிட்டத்தட்ட 9 முதல் 10 வாரங்கள் கர்ப்பமாக இருந்தார் என கூறினார்.

இந்த சந்தேகமானது நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், டயானாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிரபல மருத்துவர் Richard, பொதுமக்களின் சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இது பற்றி பேசிய அவர், விபத்து நடந்த சமயத்தில் டயானா கர்ப்பமாக இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் உடற்கூறு ஆய்வில் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்