லண்டனில் திடீர் தீ விபத்து: 80 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
128Shares
128Shares
ibctamil.com

லண்டனில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீப்பற்றியது. வட லண்டனில் உள்ள Highbury Leisure Centre என்னும் கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க 80 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீப்பிடித்த கட்டிடத்திலிருந்து கரும்புகை எழும்புவதை வீடியோ ஒன்றில் காணலாம். கட்டிடத்தின் கூரைப்பகுதியில் பாதி எரிந்து போனதாக தெரியவந்துள்ளது. தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.

சம்பவ இடத்திலிருந்த ஒருவர், யாருக்கும் மோசமான காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்