பிரித்தானியாவில் நூடூல்ஸ் சாப்பிட்ட பெண்ணிற்கு இரத்தமாக வந்த பரிதாபம்! நடந்தது என்ன?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொண்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரித்தானியாவின் Manchester-ல் உள்ள Wigan பகுதியைச் சேர்ந்தவர் Shannen. 20 வயதான இவர் தன் ஆண் நண்பரான Keelan Unsworth என்பவருடன் சேர்ந்து spicy ramen challenge என்ற சாவலை செய்துள்ளார்.

அதாவது அதிக காரம் கொண்ட நூடூல்ஸை இருவரும் சாப்பிட்டுள்ளனர். இதில் Keelan முதலில் நூடூல்ஸை சாப்பிட்டு முடித்தார்.

இவருடன் சேர்ந்து நூடூல்சை சாப்பிட்டுக் கொண்டிருந்த Shannen இடையில் அவ்வப்போது தண்ணீர் போன்றவை குடித்து அவரை ஏமாற்றி ஒரு வழியாக சவாலை முடித்தார்.

இந்த சவால் முடிந்த பின் இருவரும் பால், இனிப்பு வகைகள் போன்றவைகளை தேடி, தேடி சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த சவால் முடிந்த அடுத்த நாள் Shannen மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு நாட்கள் இதனால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவிக்கையில், அது ஒரு நல்ல சவால் தான், எளிதாக முடிக்க கூடியது தான். ஆனால் அதனால் இப்படி மருத்துவமனையில் வந்து இருப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

அந்த சாவல் முடிந்த பின்னர், எனக்கு உடலில் பல இடங்களில் வலி ஏற்பட்டது. மறுநாள் நான் கழிவறைக்கு சென்ற போது, இரத்தம் வந்தது. இதனால் நான் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டேன்.

அப்போது மருத்துவர்கள் என்ன நடந்தது என்று கேட்டனர். நான் அவர்களிடம் இதை சொல்லிய போது சிரித்தனர். அதன் பின் அவர்களின் சிகிச்சையால் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இது போன்ற சவால்கள் எல்லாம் உடல்நலத்திற்கும் மிகவும் மோசமானது, தயவு செய்து பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆபத்தான சவால்களை செய்யாதீர்கள் என்று Shannen-க்கு சிகிச்சையளிக்கு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இவருடன் சேர்ந்து சாப்பிட்ட Keelan Unsworth எப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் Shannen மீண்டும் இந்த சவாலை தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்