கதவை உடைத்துக் கொண்டு விமானத்தை பிடிக்க முயன்ற பயணி: பரபரப்பு சம்பவம்

Report Print Kabilan in பிரித்தானியா

அயர்லாந்தில் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், தாமதமாக வந்ததால் பயணி ஒருவர் கதவை உடைத்துக் கொண்டு விமானத்தை விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் டுப்ளின் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு, பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது வாலிபர் ஒருவர் கையில் சூட்கேசுடன் பரபரப்பாக விமான நிலையத்திற்குள் புகுந்தார்.

அவர் விமானம் புறப்பட்டுவிட்டதை அறிந்தாலும், சத்தமிட்டபடி அதனை விரட்டிக் கொண்டே ஓடி வந்தார். இதனால் பதற்றமடைந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், குறித்த பயணி விமான நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஒரு பெண்ணும் கலந்துகொண்டர். அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த பொலிசார் குறித்த வாலிபரை கைது செய்தனர்.

அதன் பின்னர் நடந்த விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் பேட்ரிக் கெகோயே(23) என்பதும், தாமதமாக வந்ததால் புறப்பட்ட விமானத்தை தரையிறக்க அவர் கதவை உடைத்துக் கொண்டு ஓடி வந்ததாகவும் தெரிய வந்தது.

மேலும், இதன் காரணமாகவே பேட்ரிக் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்