விதம் விதமாக உடை உடுத்தும் மேகன் திடீரென கருப்பு நிறத்துக்கு மாறியது ஏன் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

விதம் விதமாக உடை அணியும் பிரித்தானிய இளவரசி மேகன் திடீரென கருப்பு நிற உடைக்கு மாறியது ஏன் என்னும் கேள்விக்கு நிபுணர்கள் பதிலளித்துள்ளனர். கோடை விடுமுறைக்குப் பின் மேகன் பங்குபெற்ற பொது நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலுமே அவர் கருப்பு நிற உடைதான் உடுத்தியிருந்தார்.

Royal Academy of Artsஇல், தனது முதல் தனி நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகன் கருப்பு நிற உடை உடை உடுத்தியிருந்தார்.

WellChild Awards நிகழ்ச்சியிலும், லண்டனில் Hamilton gala performanceஇன்போதும் அவர் கருப்பு நிற உடையே உடுத்தியிருந்தார். சமீபத்தில் தனது தொண்டு நிறுவன சமையல் புத்தக வெளியீட்டு நிகழ்விலும் நீல மற்றும் கருப்பு நிற உடையே அணிந்திருந்தார்.

திடீரென அவர் கருப்பு நிற உடைக்கு மாறியது ஏன் என்ற கேள்விக்கு நிபுணர்கள் சிலர் விடையளித்துள்ளனர்.

மேகன் தான் சந்திக்கும் பிரபலங்கள், அல்லது தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை விட தனது உடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், அதற்காகவே அவர் கருப்பு நிற உடை அணிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிறங்கள் தொடர்பான மனோவியல் நிபுணரான Karen Haller கூறும்போது, பொது நிகழ்ச்சிகளில் மேகன் கருப்பு நிற உடை அணிந்துவருவதைப் பார்க்கும்போது, தான் நிகழ்ச்சியின் மையப்பொருளாக இல்லாமலிருப்பது தனக்கு பிரச்சினையில்லை என்றும், தன் மீது கவனம் செலுத்தப்பட வேண்டாம் என அவர் எண்ணுவதையுமே அது வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

Rochelle White என்னும் பிரபல ஆடையலங்கார வல்லுனர் தெரிவிக்கும்போது, மேகன் தன்னை எளிமையாக காட்டுவதற்காக கருப்பு நிற உடைகளை அணிவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்