விமானத்தில் திடீரென சுருண்டு விழுந்து மரணமடைந்த இளம்பெண்ணின் இறுதி நிமிட வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற விமானத்தில் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணின் இறுதி நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Natasha Ednan-Laperouse என்ற 15 வயது இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யாவை நோக்கி British airways விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அவருடன் தோழி Bethany மற்றும் அவருடைய தந்தையும் பயணம் செய்தனர். லண்டன் விமான நிலையத்தில், லேபிள் மீது பட்டியலிடப்படாத எள் விதைகள் கொண்ட சான்டவிஜ் ஒன்றினை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

விமானத்தில் அரைமணி நேரமாக பேசி விளையாடி கொண்டிருந்த Natasha-விற்கு திடீரென தொண்டையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் முகம் முழுவதும் நிறம் மாற துவங்கியிருக்கிறது. அப்பா என்னால் மூச்சு விட முடியவில்லை. உதவி செய்யுங்கள் என Natasha கூறியதும் வேகமாக ஆக்சிஜன் பொருத்தப்பட்டது.

ஆனால் எதுவுமே பலன் அளிக்காமல் சில நிமிடங்களில் Natasha உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தங்களுக்கு உரிய நீதியை பெற்று தரவேண்டும் என Natasha-வின் தந்தை விமான நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார்.

இச்சமபவம் தொடர்பாக சுற்றுச்சூழல் செயலாளர் மைக்கேல் கோவ் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக Natasha, தன்னுடைய கையில் வைத்திருந்த வெள்ளை நிறத்திலான சாயத்தை மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்