ஒற்றை புகைப்படம்: ஒட்டுமொத்த பிரித்தானியர்களாலும் கொண்டாடப்படும் சிறுவன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
121Shares

பிரித்தானியாவில் முதியவருக்கு பாடசாலை சிறுவன் உதவுவதாக வெளியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த புகைப்படம் தொடர்பில், அந்த சிறுவனைப் பெற்ற பெற்றோர்கள் கண்டிப்பாக பாராட்டுதலுக்கு உரியவர்கள் எனவும் புகழ்ந்துள்ளனர்.

பெயர் குறிப்பிடதாக பாடசாலை சிறுவன் தமது குடியிருப்புக்கு திரும்பும் வழியில் ஷோப்பிங் முடித்துவரும் முதியவர் ஒருவருக்கு உதவுகிறான்.

இந்த புகைப்படமே ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. Kingstanding பகுதியில் குடியிருக்கும் Emma Cope என்பவரே குறித்த புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சம்பவத்தின்போது எம்மா தமது காரில் நின்று இறங்கியுள்ளார். அப்போது பாடசாலை சிறுவன் அந்த முதியவரிடம், உங்களுக்கு நான் உதவலாமா என கேட்கிறான்.

சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு பரவசமான முதியவர், உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார். தள்ளாடியபடியே மெதுவாக நடந்து செல்லும் அந்த முதியவருடன் தனது புத்தகப்பையையும் சுமந்தபடி சிறுவனும் நடந்து சென்றுள்ளான்.

சிறுவனின் இந்த இரக்க குணத்திற்கு அவனது பெற்றோர்கள் கண்டிப்பாக பெருமை கொள்ள வேண்டும் எனவும் எம்மா அந்த புகைப்படத்திற்கு சிறு குறிப்பும் பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படமானது இதுவரை 20,000 பேர் பகிர்ந்துள்ளனர். பலர் அந்த சிறுவனையும், அவனது பெற்றோரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்