முதலில் கண்பார்வை போனது! அடுத்து உயிர் பிரிந்தது... வெறும் காய்ச்சல் என நினைத்தவருக்கு ஏற்பட்ட சோகம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளைஞருக்கு சாதாரண காய்ச்சல் என மருத்துவர்கள் முதலில் கூறிய நிலையில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lincolnshire கவுண்டியை சேர்ந்தவர் ஆரோன் விண்டேன்லி. இவருக்கு கடந்த 2016-ல் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவரிடம் ஆரோன் சென்ற நிலையில் அவருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.

சில மாதங்கள் கழித்து திடீரென ஆரோனின் ஒரு கண் பார்வை பறிபோனது.

இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரை alveolar rhabdomyosarcoma ரக புற்றுநோய் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.

ஜேர்மனியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் ஆரோனின் நோய்க்கு சிகிச்சையளிக்கபடும் என்றும் அதற்கு £300,000 செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து ஆரோனுடன் சேர்ந்து அவரின் காதலி சராயா சிகிச்சைக்கான நிதியை திரட்ட ஆரம்பித்தார்.

அவர்களுக்கு £189,000 நிதியுதவி கிடைத்த நிலையில் ஆரோன் கடந்த ஆகஸ்டில் மருத்துவமனையில் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் ஆரோனின் காதலி சராயா நேற்று வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ஆரோன் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்துவிட்டார்.

தூக்கத்திலேயே அவரின் உயிர்பிரிந்துவிட்டது.

மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை எப்போதும் ஆரோன் என்னிடம் வலியுறுத்துவார்.

அவரின் விருப்பத்தை போலவே அதை நான் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers