இளவரசி கேட்டின் தாய் செய்த மோசமான செயல்: கொதித்தெழுந்த டயானாவின் நண்பர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மேற்கத்திய நாடுகளில் மிகப்பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீனுக்காக பிரித்தானிய இளவரசி கேட்டின் தாயின் பொம்மை நிறுவனம் தயாரித்துள்ள பொம்மை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசி கேட்டின் தாயான Carole Middletonக்கு சொந்தமான அந்த நிறுவனம் இளவரசி டயானா விபத்தில் உருக்குலைந்து இறந்ததை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு பொம்மையை உருவாக்கியுள்ளது.

வெண்ணிற உடையில் இருக்கும் அந்த பொம்மையின் உடை மார்பருகே கிழிந்திருப்பதுடன் அதன் மார்புக்கூடு உடைந்து உள்ளுறுப்புகள் தெரியும் வகையிலும உடை முழுவதும் இரத்தத்துடனும் கோரமாக அமைந்துள்ளது.

இளவரசி டயானாவின் நண்பர்கள் அந்த பொம்மை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கீழ்த்தரமான எண்ணத்துடன் அது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளனர்.

அவரது பொம்மை நிறுவனத்தை ஓரம் கட்டுமாறும் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பொம்மை நிறுவனமோ, ஹாலோவீன் பார்ட்டியிலேயே இந்த இளவரசி பொம்மைதான் மிகவும் பயங்கரமான இளவரசி பொம்மை என்று விளம்பரம் செய்துள்ளதோடு ஒரு பொம்மையின் விலை 10.99 பவுண்டுகள் என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers