லண்டன் ரயில் நிலையத்தில் பொதுமக்களை பதறவைத்த சம்பவம்: பொலிஸ் குவிப்பால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கிழக்கு லண்டனில் உள்ள Hackney ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்கி வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொலைவெறி தாக்குதலில் ரயில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவத்தால் ஹைபரி, ஐலிங்டன் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்ட் பகுதிகளுக்கான ரயில் சேவை முடக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பயணிகளை சம்பவப்பகுதியில் இருந்து பாதுகாப்பு கருதி பொலிசார் வெளியேற்றியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் பிரித்தானிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரு தகவல் வந்துள்ளது.

அதில் ரயில் பயணி ஒருவர் கத்திக் குத்துக்கு இரையாகியுள்ளதாகவும், இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த போக்குவரத்து பொலிசார், பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மட்டுமின்றி தாக்குதலில் ஈடுபட்ட நபரை மிக சாகசிகமாக கைதும் செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் நேரடி பார்வையாளர்கள் அல்லது அந்த விவகாரம் தொடர்பில் வீடியோ காட்சிகள் என தகவல் கிடைக்கப்பெறும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக பர்மிங்ஹாம் சிட்டி சென்டரில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூவரையும் மீட்டு பொலிசார் மருத்துவமனை சேர்ப்பித்துள்ளனர். மட்டுமின்றி சம்பவம் நடந்த பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கமெராக்களை பொலிசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers