18 வயதில் சிறிய அறையில் அடைக்கப்பட்ட நபர் 58 வயதில் மீட்பு: மீட்கப்பட்ட போது எப்படி இருந்தார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் 40 ஆண்டுகளாக ஷெட் போன்ற ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

Cumbria கவுண்டியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

நபர் ஒருவர் கடந்த 1978-ல் தனது 18-வது வயதில் வேலை தேடி அங்கு வந்துள்ளார்.

அப்போது சம்பளம் தரப்படாத அடிமையாக அவர் வேலையில் அமர்த்தப்பட்டு கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

இப்படி அந்த ஷெட்டில் அவர் 40 ஆண்டுகள் இருந்த நிலையில் அதிகாரிகளின் சோதனையின் போது சமீபத்தில் 58வது வயதில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரை மீட்ட அதிகாரி கூறுகையில், சிறிய வெளிச்சத்தில் அந்த ஷெட்டில் மீட்கப்பட்ட நபர் நாங்கள் அவர் அருகில் சென்றபோது மிகவும் பயந்து போய் இருந்தார்.

உடனடியாக மீட்கப்படவேண்டிய நிலையில் பலவீனமாக இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

அவர் இருந்த ஷெட்டில் போர்வையும், சிறிய சேரும் இருந்தது. அறை முழுவதும் குளிர்ச்சியாக இருந்தது, மனிதர்கள் அங்குவாழவே முடியாதபடி இருந்தது.

இது சம்மந்தமாக 79 வயது முதியவரை கைது செய்துள்ளோம்.

இந்த 40 வருடத்தில் அடிமையாக இருந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றாரா என்ற விபரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers