மனைவியை கொலை செய்ய முயற்சிப்பதை நேரலையில் ஒளிபரப்பிய கணவர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் பிரிந்த மனைவியை அடித்து கொலை செய்ய முயன்ற கணவன் அதனை வாட்ஸ் ஆப் மூலம் நேரலையாக ஒளிபரப்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லண்டனை சேர்ந்த ரஹ்மான் உல்லா (38) உபேர் வாகன ஓட்டியாக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்து மனைவி ராஜாவை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

கடந்த மே மாதம் திடீரென ராஜாவின் வீட்டிற்கு வந்த ரஹ்மான், வேகமாக தன்னுடைய செல்போனை எடுத்து பாகிஸ்தானில் இருக்கும் ராஜாவின் அம்மா மற்றும் தம்பிக்கு வாட்ஸ் ஆப் வீடியோ கால் செய்துள்ளார்.

பின்னர் அவர்களை பார்த்து, நான் இவளை கொலை செய்ய போகிறேன் என கூறிவிட்டு, சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர் வேகமாக சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, நான் இப்பொழுது உன்னை குத்தி கொலை செய்யப்போகிறேன் என கூறிவிட்டு தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் ரஹ்மானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 14 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்