பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக நடக்கும் நெகிழ்ச்சி சம்பவம்! வீடற்றவர்களுக்கு இப்படியும் உதவும் நபர்

Report Print Santhan in பிரித்தானியா
328Shares
328Shares
ibctamil.com

பிரித்தானியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக வீடற்ற மக்களுக்கு ஒரு சிப்ஸ் கடையில் இரவு நேரத்தில் உணவு வழங்கப்பட்டு வரும் சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் Yorkshire மாகாணத்தின் Leeds பகுதியில் உள்ள சிப்ஸ் கடையிலே இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது.

அந்த கடையின் உரிமையாளர் சுமார் பத்து ஆண்டுகளாக இரவு நேரங்களில் வீடற்ற மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்.

அந்த உணவில் மீன் மற்றும் சிப்ஸ் போன்றவைகள் இருக்கும் எனவும், இது இரவு நேரத்தில் மட்டுமே கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கிருக்கும் வீடற்ற மக்கள் முன்னரே வந்து நின்றுவிடுகின்றனர்.

அதன் பின் அந்த கடையின் ஊழியர் உணவு பாக்கெட்டுகளை எடுத்து வந்து அவர்களுக்கு கொடுக்கிறார். அந்த நேரத்தில் யார் வந்து உணவு கேட்டாலும் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த கடையின் உரிமையாளர் என்ன காரணத்திற்காக இப்படி செய்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, ஆனால் உணவு கொடுப்பது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவைக் கண்ட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்