பிரித்தானியாவில் அந்தரத்தில் மிதக்கும் திரையரங்கம்!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அந்தரத்தில் மிதந்துகொண்டே திரைப்படம் பார்க்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் 4GEE என்ற நிறுவனம், முதல் முறையாக அந்தரத்தில் தொங்கியபடி திரைப்படம் பார்க்கும் வசதி உருவாக்கியுள்ளது.

இது 4G தொழில்நுட்பத்தின் மூலம் படம் பார்க்கும் வசதியை கொண்டுள்ளது. சுமார் 100 அடி உயரத்தில் தொங்கும் கிரேன் தட்டில், 20 பேர் அமர்ந்தபடி திரைப்படத்தை காணும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

திரையில் 4G தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன படக்காட்சிகள் ஒளிபரப்பப்படும். இதனால் அசைந்தபடி படத்தினை கண்டுகளிக்கலாம். சாப்பிடுவதற்கு உணவுப் பொருட்கள் தேவைப்பட்டால், பறக்கும் ட்ரோன் மூலம் திரையங்குக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த சிறிய திரையரங்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கழிவறை வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொதுமக்கள் மத்தியில் இந்த திரையரங்கிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers