குழந்தையின் பாலினத்தை முடிவு செய்ய பணம் பெறும் அரசு மருத்துவர்கள்: அதிர்ச்சி செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தையின் பாலினத்தை முடிவு செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்தும் பணம் பெற்றுக் கொண்டு அதை அரசு மருத்துவர்கள் செய்வது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு பையன்கள் இருப்பதால் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் சிலர் பிரித்தானியாவின் மிகப் பிரபலமான ஒரு அரசு மருத்துவரை அணுகியபோது, அவர் பணம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமான அந்த செயலுக்கு ஒப்புக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் குறிப்பிட்ட சில மரபு ரீதியான நோய்களைத் தவிர்ப்பதற்காக அன்றி மற்றபடி குழந்தையின் பாலினத்தை முடிவு செய்வது சட்ட விரோதம் ஆகும்.

இதனால் மருத்துவர்கள் தங்கள் தனியார் கிளினிக்குகளில் பெற்றோரை சந்தித்து அதற்கான ஆலோசனை வழங்குவதோடு, அதற்கான பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகளை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கிளினிக்குகளில் செய்வது தெரியவந்துள்ளது.

இந்திய பெற்றோர் தங்கள் சொத்துக்கள் கைவிட்டு போய் விடக்கூடாது என்பதற்காக ஆண் குழந்தைகள் வேண்டும் என்று கேட்கிறார்கள், பிரித்தானியர்களோ பெண் குழந்தைகள் வேண்டும் என்கிறார்கள்.

இதற்காக அவர்கள் 14,000 பவுண்டுகள் வரை செலவிடுகிறார்கள்.

மருத்துவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமான இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.

செயற்கை கருத்தரித்தல் முறையில் குரோமோசோம்களைக் கணக்கிட்டு இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

இதனால் இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன் உடையவர்களும்கூட செயற்கை கருத்தரித்தல் முறையை நாடுகிறார்கள்.

இந்நிலையில் இந்த உண்மை வெளியே தெரிய வந்ததையடுத்து, நேற்று இரவு மனித கருவுறுதல் மற்றும் கருவியல் அமைப்பு இந்த சட்ட விரோத செயல்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers