பாலியல் சீண்டல்களுக்கு இரையாகும் பிரித்தானிய பாடசாலை மாணவிகள்: வெளியான பகீர் காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பாடசாலை சீருடையில் இருக்கும் மூன்றில் ஒரு சிறுமி பாலியல் தொல்லையில் சிக்குவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், பாடசாலை சீருடையில் இருக்கும் பிரித்தானிய சிறுமிகளில் 35 விழுக்காட்டினர் பொதுவெளியில் பாலியல் சீண்டல்களுக்கு அனுதினம் இரையாவதாக தெரியவந்துள்ளது.

மேலும் 12 வயதுக்கும் குறைவான சிறுமிகளில் 8 பேரில் ஒருவர் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதும் தெரியவந்துள்ளது.

14 முதல் 21 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,004 பாடசாலை மாணவிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், பாடசாலை சீருடையுடன் இருக்கும் 7 சிறுமிகளில் ஒருவர் முகம் தெரியாத நபரால் பின் தொடரப்பட்டார் எனவும், சுமார் 8 விழுக்காட்டினர் அடையாளம் தெரியாத நபர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டோம் அல்லது வீடியோ பதிவு செய்யப்பட்டோம் என இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 37 விழுக்காடு மாணவிகள் பாலியல் தொல்லைக்கும் இரையாகியுள்ளனர். ரயில் பயணங்களிலேயே பாடசாலை மாணவிகளுக்கு அதிக பாலியல் தொல்லை ஏற்படுவதாக மாணவி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பெருமளவு மாணவிகள் தங்களின் குட்டைப்பாவாடையே இந்த நிலைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவெளியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers