ஒரு அழகிய பிரித்தானிய வீராங்கனையின் புன்னகையின் பின்னணியில் உள்ள கதை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
103Shares
103Shares
ibctamil.com

இந்த அழகிய பிரித்தானிய வீராங்கனையின் புன்னகையின் பின்னால் ஒரு பெரிய கதை உள்ளது.

பிறக்கும்போது ஆணாகப் பிறந்து பின் திருநங்கையாக மாறிய Hannah Winterbourne (30), பிரித்தானிய ராணுவத்தின் மிக உயரிய பதவி வகிக்கும் திருநங்கை ஆவார்.

மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு திருநங்கைகள் குறித்த ஆலோசனையும் பல திருநங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளிப்பவர்.

பிரித்தானிய ராணுவம் ஆணாக இருந்து பின் பெண்ணாக மாற முடிவு செய்யும் வீரர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது.

அதுமட்டுமின்றி Hannah Winterbourneஉடன் பணிபுரியும் மூன்று திருநங்கை ராணுவ வீரர்களுக்கு தனியாக தூங்கும் இடமும் குளியலறை வசதியும் செய்து கொடுத்து அவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.

Hannah Winterbourne கூறும்போது ஆப்கன் போரை விட பெண்ணாக மாறுவது கடினமாக இருந்ததாகக் கூறுகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்