காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை முன்னாள் காதலனுக்கு அனுப்பிய காதலி! கிடைத்த தண்டனை

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை முன்னாள் காதலனுக்கு காதலி அனுப்பியதால், காதலன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பத்தையடுத்து, காதலிக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் Middlesbrough பகுதியில் இருக்கும் Teesside Crown நீதிமன்றத்தில் Sarah Bramley என்ற 29 வயது இளம் பெண்ணின் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் Sarah Bramley-க்கு 4 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Sarah Bramley என்ற பெண் David Saunders(33) என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.

அதன் பின் பல பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் திகதி Sarah Bramley தன்னுடைய புதிய காதலனான Michael Lawson(34) என்பவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

அதன் பின் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தன்னுடைய முன்னாள் காதலனான David Saunders-க்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர் Michael Lawson-ஐ கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு அப்போது நடந்து வந்த வேளையில், David Saunders-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 22 ஆண்டுகளாவது சிறையில் இருக்க வேண்டும் என்றும் அதன் பின் அவரின் நடவடிக்கைகளை பார்த்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கொலைக்கு காரணம் Sarah Bramley தான், அவர் மட்டும் புகைப்படம் அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. கொலை செய்பவரை விட, கொலை செய்ய துண்டியவருக்கு தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு Teesside Crown நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது Sarah Bramley-க்கு 4 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட Michael Lawson-க்கு குழந்தை ஒன்று உள்ளது என்றும், தற்போது அந்த குழந்தை அப்பா இல்லமால் கஷ்டப்பட்டு வருவதாகவும் Michael Lawson-ன் குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers