மெக் டொனால்டில் வாந்தி எடுத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி: ஊழியர் செய்த இரக்கமற்ற செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா
287Shares
287Shares
ibctamil.com

பிரித்தானியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி மெக்டொனால்டு உணவகத்தில் வாந்தி எடுத்த போது நடந்த நிகழ்வு சிறுமியின் தாயை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Merseyside கவுண்டியில் அமைந்துள்ள மெக்டொனால்டு உணவகத்துக்கு பெத் கிங் (30) என்ற பெண் தனது குழந்தைகளான லோலா (7) மற்றும் ஸ்டெல்லா (5) உடன் வந்தார்.

இதில் லோலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சிகிச்சை சிறுமிக்கு அளிக்கப்பட்டு வந்தது.

உணவகத்தில் பெத்கிங்கும், ஸ்டெல்லாவும் சாப்பிட தொடங்கிய நிலையில் லோலோவுக்கு திடீரென குமட்டல் ஏற்பட்டது. இதையடுத்து வாந்தி எடுத்தார்.

உடனடியாக அங்கு பாட்டிலில் தண்ணீரை எடுத்த வந்த உணவக ஊழியர் லோலோவுக்கு குடிக்க குடித்தார்.

பின்னர் மீண்டும் அங்கு வந்த ஊழியர், குடித்த தண்ணீருக்கு £1.29 பணம் தரும்படி பெத்கிங்கிடம் கேட்டார்.

உணவக மேலாளர் பணத்தை வாங்க கூறியதாகவும் தெரிவித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த பெத்கிங் மேலாளரை பார்க்க வேண்டும் என கூறியும் அவர் சந்திக்கவில்லை.

குழந்தைக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு உடனடியாக பணம் கேட்ட உணவகத்தின் செயல் பெத்கிங்கை வெறுப்படைய செய்துள்ளது.

இது குறித்து பேசிய மெக்டொனால்ட் செய்தி தொடர்பாளர், எங்கள் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.

குறித்த சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம்.

அந்த வாடிக்கையாளரை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து விரிவாக பேச விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்