இளவரசியின் திருமணத்திற்கு வரிப் பணத்தை செலவிடக் கூடாது: போர்க்கொடி தூக்கும் மக்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
234Shares
234Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசிகளில் அரியணையேற வாய்ப்புள்ளோர் வரிசையில் ஒன்பதாவது நபராக இருப்பவர் இளவரசி யூஜீன் (28). வெள்ளியன்று அவருக்கும் Jack Brooksbank என்பவருக்கும் WindsorCastleஇல் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.

ஐந்து மாதங்களுக்குமுன் இதே தேவாலயத்தில் வைத்து இளவரசர் ஹரிக்கும் மேகன் மெர்க்கலுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அரியணையேற வாய்ப்புள்ளோர் வரிசையில் ஒன்பதாவது நபராக இருக்கும் நிலையிலும், ஹரி - மேகன் திருமணம் போலவே தனது திருமணமும் பிரமாண்டமாக நடைபெற வேண்டும் என விரும்புகிறார் யூஜீன்.

அதற்காக பல பிரபலங்கள் உட்பட 850 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட இருப்பதோடு, Windsor தெருக்களில் பெரிய ஊர்வலமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மக்களின் பணத்தில் இருந்து 2 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட உள்ளது, இது ஹரி - மேகன் திருமணத்தை விட 500,000 பவுண்டுகள் அதிகமாகும்.

ஒரு சிறிய இளவரசியின் திருமணத்திற்கு இவ்வளவு செலவா? அதுவும் மக்களின் வரிப்பணம் இவ்வளவு வீணடிக்கப்பட வேண்டுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ள நிலையில் ஒரு அமைப்பினர், அரசாங்கம் இளவரசி யூஜீனின் திருமணத்திற்காக மக்களின் வரிப்பணமான 2 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட செய்யப்பட்டுள்ள முடிவை திரும்பப் பெறக்கோரி புகார் மனு ஒன்றை தயாரித்துள்ளனர்.

30,000 கையெழுத்துகள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட அந்த புகார் மனுவில் இதுவரை 40,000 பேர் கையெழுத்திட்டாயிற்று.

இளவரசி யூஜீனுடைய திருமணத்திற்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது தடுத்து நிறுத்தப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்