இலங்கையில் தேனிலவு முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம் ஜோடிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா
476Shares
476Shares
ibctamil.com

இலங்கையில் தேனிலவு கொண்டாடிவிட்டு பிரித்தானியாவுக்கு திரும்பிய ஜோடி நாய்குட்டியை தத்தெடுத்த நிலையில் நாங்கள் பெற்றோர்களாக ஆகிவிட்டோம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் எசக்ஸை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரும் ஒலிவியா என்ற பெண்ணும் கடந்த 2016-ல் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நட்பாகியுள்ளனர்.

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து புதுமண தம்பதிகள் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

அங்கு இருவரும் காதல் ரசம் பொங்க எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட அது வைரலானது.

இந்நிலையில் தேனிலவு முடிந்து பிரித்தானியா திரும்பியதுமே இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளனர்.

காரணம் நாய் பிரியர்களான அலெக்ஸ் மற்றும் ஒலிவியா பிரஞ்ச் பப்பி நாய் ஒன்றை வளர்க்க தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே இவர்களிடம் ரீஜி என்ற நாய்க்குட்டி இருக்கும் நிலையில் புதிய நாய்க்கு வின்னி என பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து ஒலிவியா கூறுகையில், தேனிலவு முடிந்து வந்த அடுத்தநாளே வின்னி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான்.

தற்போது நாங்கள் புதிய பெற்றோர்கள் ஆகிவிட்டோம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்