மகள் பிறந்தது முதல் ஒரு நாளைக்கு 20 முறை வாந்தி எடுக்கும் தாய்: பரிதாப சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
536Shares
536Shares
ibctamil.com

பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்தது முதல் தினமும் 20 முறைக்கு மேல் வாந்தி எடுப்பதால் உடல் எடை இழந்து மிகவும் பரிதாபமாக காணப்படுகிறார்.

இங்கிலாந்தின் Devon பகுதியை சேர்ந்தவர் Sinead Tanner (20). இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சியான்னா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதிலிருந்து அவர் உணவு எடுத்துக்கொண்டாலே அது அடுத்த சில நிமிடங்களில் வாந்தியாக வெளிவந்துள்ளது.

இது நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவருடைய உடல் எடை குறைந்து, எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவரை போல் காணப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் என்ன நோய் என்பதையே கண்டறிய முடியாமல் திகைத்துள்ளனர்.

இதனால் பெரும் வேதனை அடைந்துள்ள Sinead, நான் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு செல்லும்போது அடிக்கடி கழிவறைக்கு சென்றுவிடுவேன். இதனால் என்னுடைய நண்பர்கள் என்னை தவறாக நினைப்பார்கள். இதை படிக்கும்போது அவர்கள் என்னை பற்றி புரிந்து கொள்வார்கள்.

நான் இப்போது என்னுடைய உயிரை தக்கவைத்துக்கொள்வதற்காக தினமும் 12 மாத்திரைகள் சாப்பிடுகிறேன். அது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்