என் திருமண உடையில் முதுகு தெரிய வேண்டும்: இளவரசியின் கோரிக்கையும், காரணமும்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
320Shares
320Shares
ibctamil.com

இன்று பிரித்தானிய இளவரசிகளில் ஒருவரான யூஜீன் தனது ஏழு ஆண்டு கால காதலரை மணம் முடித்த நிலையில், தனது திருமண உடை முதுகு தெரிவதுபோல் இருக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதன் காரணம் என்ன தெரியுமா?

இளவரசி யூஜீன் 12 வயதாக இருக்கும்போது அவருக்கு scoliosis என்னும் முதுகெலும்பு வளைவு நோய்க்காக பெரிய அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது.

அவரது முதுகெலும்பின் இரு பக்கங்களிலும் எட்டு இஞ்ச் டைட்டானியம் கம்பிகள் பொறுத்தப்பட்டன.

அந்த அறுவை சிகிச்சையின் தழும்புகள் இன்னும் அவரது முதுகில் காணப்படுகின்றன. அவற்றை மறைக்க விரும்பாமல், அவை தனது திருமண உடையில் தெரிய வேண்டும் என்பதற்காகவே அந்த உடையை தனது முதுகு தெரியும்படி வடிவமைக்கும்படி அவர் கோரியிருந்தார்.

அழகு என்பது என்ன என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன், உங்கள் தழும்புகளை வெளியே காண்பிப்பதிலும் ஒரு தவறும் இல்லை என்று கூறினார் இளவரசி யூஜீன்.

அவர் தனக்கு அறுவை சிகிச்சை செய்து தனது வாழ்வையே மாற்றிய மருத்துவரையும் தனது திருமணத்திற்கு தவறாமல் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்