பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அகதி! தடுத்து நிறுத்திய பயணிகள்... வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து பாலியல் குற்றவாளி ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சோமாலிய நாட்டை சேர்ந்த 29 வயதான யாகூப் அகமது என்ற அகதியை கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஹீத்ரோவில் இருந்து துருக்கிக்கு பிரித்தானிய பொலிஸார் நாடு கடத்துவதற்காக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றினர்.

அவர் துன்புறுத்தப்படுவதாக உணர்ந்த சகபயணிகள் அவரை நாடுகடத்த வேண்டாம் என கூச்சலிட்டனர். மேலும் தங்களுடைய செல்போன்களில் அதனை வீடியோவாக எடுக்க ஆரம்பித்தனர். இதனால் விமானம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக அவர் நாடு கடத்தப்பட்ட மாட்டார் என பொலிஸார் அறிவித்தனர். அப்போது ஒரு பயணி, இன்றிலிருந்து நீ ஒரு சுதந்திர பறவை. சந்தோசமாக இரு என கூச்சலிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள அதிகாரி ஒருவர், பொதுமக்கள் அனைவரும் நல்ல காரியம் செய்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால் யாகூப் ஒரு குற்றவாளி என்பது அவர்களுக்கு தெரியாது.

சிரியாவில் இருக்கும்போது பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக யாகூப் மீது புகார் அறிக்கை உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் ஒரு இரவு நேரத்தில் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் சென்று கொண்டிருந்த யாகூப், 16 வயது இளம்பெண்ணை கொடூரமாக கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் அனைவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளிகளுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். யாகூப் தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், அவரை நாடு கடத்துமாறு உள்துறை அலுவலகம் ஆணையிட்டது.

அதன்பேரில் செவ்வாய் பிற்பகல் நேரம் குற்றவாளியை இஸ்தான்புல்லுக்கு விமானத்தில் அனுப்பி வைத்தோம். அங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என கூறியுள்ளார்.

தற்போது இதன் உண்மை நிலவரம் வெளியான பின்னர் பொதுமக்கள் பலரும் தங்களுடைய ஆதங்கத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

குற்றவாளிக்கு ஆதரவாக தலையிட்ட அனைவரையும் பொலிஸார் கைது செய்திருக்க வேண்டும் என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், விமானத்தில் பயணித்த அனைவரும் முட்டாள்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்