பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு புது வரவு: மகிழ்ச்சியும் சோகமும்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி, இளவரசி மேகன் தங்கள் குழந்தையைக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

இளவரசி யூஜீன் திருமணத்தின்போதே இளவரசி மேகனின் உடையைச் சுட்டி காட்டி அவர் கர்ப்பமாக இருக்கலாம் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட நிலையில், அரண்மனை அதிகாரப்பூர்வமாகவே இளவரசி மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் இளவேனிற்காலத்தில் ஒரு குட்டிப் பையன் அல்லது பெண்ணை எதிர்பார்க்கலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால் கூடவே ஒரு சிறிய சோக செய்தியும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிறக்கும் குழந்தை இளவரசர் என்றோ இளவரசி என்றோ அழைக்கப்படாது என்பதுதான் அது.

வேண்டுமென்றால் அது பையனாக இருந்தால் Earl of Dumbarton என்பது போன்றோ, பெண்ணாக இருந்தால் Lady (முதல் பெயருடன்) Mountbatten Windsor என்பது போன்ற பெயருடன்தான் அழைக்கப்படும்.

பிறக்கவிருக்கும் குழந்தை தனது தந்தையான இளவரசர் ஹரிக்குப் பின் அரியணை ஏறும் வாய்ப்புள்ள ஏழாவது நபர் என்பதால், ஏற்கனவே வரிசையில் ஏழாவதாக இருந்த இளவரசர் ஆண்ட்ரூ எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மகாராணி நினைத்தால், சட்டங்களில் மாற்றம் செய்தால் வேண்டுமென்றால், பிறக்கவிருக்கும் குழந்தை இளவரசர் என்றோ இளவரசி என்றோ அழைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்