கர்ப்பமாக இருக்கும் பிரித்தானியா இளவரசி மெர்க்கலுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசர் ஹாரி, கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தை தொடர்ந்து இருவரும் கென்சிங்டன் அரண்மனையில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், கென்சிங்டன் அரண்மனை, இளவரசி மேகன் கர்ப்பமாக உள்ளதாகவும், இதை மக்களிடம் பகிர்ந்துகொள்வதில் இளவரசர் ஹாரியும், இளவரசி மேகனும் மகிழ்ச்சிகொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

அரச குடும்பத்தில் சிறு விசயத்தையும் கொண்டாடும் பிரித்தானியா மக்கள், தற்போதே இந்தப் புது வரவைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

கென்சிங்டன் அரண்மனை பகிர்ந்திருக்கும் நிலையில், இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருக்கின்றனர்.

அரசகுடும்பத்தில் பொதுவாக கர்ப்பமாக இளவரசிகளுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறதாம், அதை எல்லாம் மீறக்கூடாதாம், அதே போன்று தான் மெர்க்கலுக்கும் என்று கூறப்படுகிறது.

அது என்னென்ன கட்டுப்பாடுகள் பிரபல ஆங்கில் ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதாவது கர்ப்பமாக இருக்கும் மெர்க்கல் தன்னுடைய குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எப்போதும் ரகசியமாக வைத்து கொள்ள வேண்டுமாம்.

இளவரசி கேட் மிடில்டன் தன்னுடைய மூன்றவாது குழந்தையான Louis பிறக்கும் வரை அதை ரகசியமாகத் தான் வைத்திருந்தாராம்.

ஆனால் ஊடகங்களில் கேட் மிடில்னுக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஒரு விவாதாமே சென்றதாம்.

மற்றொன்று கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அதிக தூரம் பயணம் செல்லக்கூடாதாம். ஆனால் தற்போது மெர்க்கல் அவுஸ்திரேலியாவில் இருக்கிறாரா? இதுவே கட்டுப்பாடுகளை மீறியது தானே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே சமயம் கேட் மிடில்டன் தன்னுடைய மூன்றாவது குழந்தைக்காக கர்ப்பமாக இருந்த போது, அவர் அதிக தூர பயணங்களை எல்லாம் குறைத்துவிட்டாராம், அவர் கர்ப்பகாலத்தில் நார்வே சென்றது தான் அதிக தூரம் சென்று கூறப்படுகிறது.

அடுத்தபடியாக ஹரி-மெர்க்கல் தம்பதிக்கு குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் ராணி எலிசெபத்துக்கு தான் தெரிவிக்க வேண்டுமாம்.

இறுதியாக இந்த ஜோடிக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு பெயர்கள் இருக்குமாம். அரச குடும்பத்தில் அந்த விதிமுறை தான் பின்பற்றப்பட்டு வருகிறதாம்.

உதாரணமாக, குட்டி இளவரசர் ஜார்ஜின் பெயர் இளவரசர் ஜார்ஜ் இளவரசர் அலெக்சாண்டார் என்று இருக்கிறது. அதுமட்டுமா குட்டி இளவரசி சார்லேட் எலிசபெத் டயானா என்று உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்