ஹரி - மேகனைக் கவர்ந்த குட்டிப்பையன்: அவுஸ்திரேலியாவில் கிடைத்த புது நட்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்திருக்கிறார்.

வறட்சி நிறைந்த பகுதியான Dubbo என்னும் நகருக்கு ராஜ தம்பதியினர் சென்றபோது அவர்களுக்கு அந்த நெகிழ்ச்சியான தருணம் கிடைத்தது.

Dubbo விமான நிலையத்தில் தங்களைக் காண வந்திருந்த பள்ளிச் சிறுவர்கள் ஒருவரையும் விடாமல் அனைவருடனும் தம்பதியினர் கை குலுக்கி முடிக்கும்போது, வரிசையில் கடைசியாக ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

அந்த ஐந்து வயது சிறுவன், டவுன் சிண்ட்ரோம் என்னும் குறைபாடுடைய சிறுவன். ஹரியையும் மேகனையும் சந்திக்க பொறுமையாக நீண்ட நேரம் காத்திருந்த அவன், தனது வாய்ப்பு வந்ததும் இளவரசி மேகனுக்கு ஒரு பூச்செண்டை பரிசாக அளித்தான்.

பின்னர் ஹரியிடம் வந்த அந்த சிறுவனுக்கு அவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

அவரைக் கட்டி அணைத்துக் கொண்ட அந்த சிறுவன் ஹரியின் தாடியைத் தொட்டுப் பார்ப்பதும், அவரது முடியைத் தொட்டுப் பார்ப்பதும், மீண்டும் அவரைக் கட்டி அணைப்பதும் என ஹரியை விடவே இல்லை.

எனது கணவரை விடமாட்டாயா என்பது போல மேகன் அவனைப் பார்க்க அவரையும் சென்று கட்டிக் கொண்டான் அவன்.

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அந்த குட்டிப் பையனின் செயல்களை ரொம்பவே ரசித்தார்கள்.

கர்ப்பமாக இருக்கும் மேகன் களைத்துப் போனாலும் தன் களைப்பை சற்றும் வெளிக்காட்டாமல் தனது கணவருடன் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்