கர்ப்பிணி மேகனை கண்ணீர் விடவைத்த சிறுவர்கள்: டோங்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அரசுமுறை சுற்றுப்பயணமாக பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் டோங்காவிற்கு சென்றபோது ஒரு கூட்டம் மாணவர்கள் இளவரசி மேகனை கண்ணீர் விட வைத்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.

The Tupou College Boys' choir என்னும் மாணவர்களின் பாடகர் குழு, ராஜ தம்பதிக்காக தங்கள் நாட்டின் கொசுத் தொல்லையைக் குறித்து ஒரு ஆக்‌ஷன் கலந்த பாடலைப் பாடிக் காட்டினர்.

காமெடியான அவர்களது பாடலும் நடன அசைவுகளும் இளவரசி மேகனைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்க, சிரித்த மேகனுக்கு கண்களில் கண்ணீர் தளும்பி விட்டது.

அவர்தான் அப்படியென்றால் அவரது காதல் கணவர் ஹரி இன்னொரு சேரில் அமர்ந்து அந்தப்பக்கம் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.

அழகான நீல நிற ஆடை ஒன்றை அணிந்து மகிழ்ச்சி பொங்க மேகன் அந்த நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் இணையத்தை நிரப்பி வருகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers