சக மாணவர்கள் 200 பேருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய மாணவி: பிரித்தானியாவில் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

முதல் உலகப் போர் ஹீரோக்களின் சுவர் சித்திரங்களை சேதப்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்த பல்கலை மாணவர் சங்க தலைவர் தொடர்பில் பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக செயல்பட்டு வருபவர் 21 வயதான எமிலி டேவ்ஸ்.

இவர், பல்கலை செனட் அறையில் இந்த வாரம் வெளியிடப்படும் முதலாம் உலகப்போரில் வீர மரணமடைந்த ஹீரோக்களின் சுவர் ஓவியங்களில் வண்ணம் பூசி சேதப்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இன ரீதியான கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்திருந்த எமிலி விடுத்திருந்த எச்சரிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பல்கலை மாணவர் சங்க தலைவராக இருக்கும் எமிலி தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சக மாணவர்களிடம் இருந்து கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கல்வி தொடர்பான மொபைல் குழு ஒன்றில் இணைந்துள்ள சுமார் 200 சக மாணவர்களுக்கு இவர் தனது முழு நிர்வாண புகைப்படத்தை அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முக்கிய உடல்பாகத்தை மட்டும் பொம்மை ஒன்றால் மறைத்திருந்ததாகவும் மாணவர்கள் தற்போது புகார் அளித்துள்ளனர்.

இடதுசாரி கொள்கைகள் கொண்ட எமிலி செல்வ செழிப்புடன் வாழ்பவர் எனவும், தமது தந்தையுடன் உலகின் முக்கிய நகரங்கலுக்கு சென்று வந்தவர் எனவும் தற்போது ஆண்டுக்கு 20,000 பவுண்டுகள் ஊதியமாக பெறும் மாணவர் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

எமிலி குறித்த நிர்வாண புகைப்பட சர்ச்சை புயலைக் கிளப்பியதும், அவர் தற்போது விடுமுறையில் இருப்பதாகவும், திரும்பி வந்ததும் இதற்கான பதிலை தெரிவிப்பார் எனவும் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எமிலி தமது நிர்வாண புகைப்படங்களை பல முறை குறிப்பிட்ட குழுவில் பகிர்ந்துள்ளார்.

இதையே வாடிக்கையாகவும் வைத்துள்ளார். மட்டுமின்றி குறிப்பிட்ட உடல் பாகங்களை மட்டும் புகைப்படமெடுத்து பகிர்வதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளார் என மாணவர்கள் தற்போது புகார் அளித்துள்ளனர்.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் செனட் அறையில் முதலாம் உலகப்போரில் வீர மரணமடைந்தவர்களின் சுவர் ஓவியங்களை இந்த வாரம் வெளியிடுகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, வெள்ளையர்களின் ஓவியங்களை நானே முன்நின்று சேதப்படுத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த டுவிட்டர் பதிவை நீக்கிவிட்டு எமிலி மன்னிப்பும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers