ஹரியின் கண்முன்னே மெர்க்கலுக்கு முத்தம் கொடுத்த விளையாட்டு வீரர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இன்விட்கஸ் விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் போட்டியில் கலந்துகொள்ள அவுஸ்திரேலிய சென்ற மெர்க்கலின் கன்னத்தில், விளையாட்டு வீரர் முத்தமிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ராணுவ பணியின்போது ஊனமுற்ற வீரர்களுக்காக நடத்தப்படும் இன்விட்கஸ் விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் போட்டி நேற்று சிட்னியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி, அவருடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கலுடன் சென்றிருந்தார்.

இருவரும் வருவதை அறிந்த பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த சத்தத்துடன் வரவேற்பளித்தனர். இவர்களுடன் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் அவருடைய மகன் ரோமியோவுடன் கலந்துகொண்டார்.

மைதானத்தில் நடந்துகொண்டிருந்த கூடைப்பந்து போட்டியானது நிறைவடைந்ததும், ஹரியும், மெர்க்கலும் மைதானத்திற்கு சென்று, வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்பொழுது ஒரு வீரர் மெர்க்கலின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

பின்னர் இருவரும் உரை ஆற்றி விழாவினை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்