அம்மா காப்பாத்துங்க: தீப்பிடித்த வீட்டிலிருந்து கதறிய சிறுவன்... பிரித்தானியாவில் நடந்த சோக சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் தாய் ஒருவர் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இன்றைய தினம் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பலத்த காயங்களுடன் சிக்கி கொண்ட சிறுவனை மீட்ட தீயணைப்பு துறையினர் குயின்ஸ் மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் வீட்டில் இருந்த பொழுது திடீரென இரு பெண்களின் அலறல் சத்தம் கேட்டேன். வேகமாக வந்து பார்த்த பொழுது, ஒரு சிறுமியும் அவருடைய தாயும் கண்கலங்கியபடி உதவி கேட்டு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுடைய வீட்டில் மளமளவென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உள்ளிருந்து சிறுவனின் அலறல் சத்தமும் வெளியில் கேட்டது. காப்பாற்றும் முயற்சியில் மேல்தளத்திற்கு செல்ல முற்பட்டேன். ஆனால் கடுமையான புகைமூட்டத்தால் என்னால் செல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்