பிரித்தானிய இளவரசர் ஹரியையும் மேகனையும் கண்டு அஞ்சிய நிலநடுக்கம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர்கள் இருக்கும் இடத்தை மட்டும் நிலநடுக்கம் நெருங்கவில்லை.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் தற்போது Auckland பகுதியில் உள்ளூர் சிறுவர் சிறுமியரை சந்தித்து வருகின்றனர்.

ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று நியூஸிலாந்தைக் குலுக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக சில பகுதிகளில் மட்டும் நிலநடுக்கம் உணரப்படவில்லை.

அவற்றில் பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் இருக்கும் ucklandம் ஒன்று.

நியூஸிலாந்துக்கு நிலநடுக்கம் ஒன்றும் புதிதல்ல. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Kaikoura பகுதிக்கருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

அந்த சமயத்தில் ஏற்பட்ட 7.8ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான அந்த நிலநடுக்கம் நியூஸிலாந்து சந்தித்த மிகப்பெரும் நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

ஐந்து ஆண்டுகளுக்குமுன் இன்னொரு நிலநடுக்கத்தை நியூஸிலாந்து சந்தித்தது, அப்போது அதுவும் 6.2ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

ஆனால் அதில் Christchurch என்ற நகரில் 180 பேர் கொல்லப்பட்டதோடு, அந்த நகரம் கட்டப்பட்டு வருவது இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை எந்த உயிர்ச்சேதமோ, காயங்களோ, கட்டிடங்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவலில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...