வயிற்றிலிருந்த குழந்தையைக் காக்க உயிரைக் கொடுத்த தாய்: கண்ணீர் விட்ட டைட்டானிக் நாயகி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குழந்தை வயிற்றிலிருக்கும்போது கருப்பையில் புற்று நோய் ஏற்பட, கருவைக் கலைத்து விடுமாறு மருத்துவர்கள் எச்சரித்ததற்கு மாறாக புற்றுநோய் சிகிச்சையை ஒத்திப்போட்டதால் உயிரிழந்தார் ஒரு பிரித்தானியப் பெண்.

பிரித்தானியாவின் Lancashireஐச் சேர்ந்த Gemma Nuttall (29) கர்ப்பமுற்றிருக்கும்போது அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கருவைக் கலைத்துவிட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் குழந்தையை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர் கீமோதெரபி என்னும் புற்றுநோய் சிகிச்சையை தள்ளிப் போட்டார்.

அதற்கு பதிலாக immunotherapy என்னும் மாற்று சிகிச்சையை அவர் சோதனை முறையில் மேற்கொண்டார்.

அந்த சிகிச்சைக்கு உதவுவதற்காக டைட்டானிக் புகழ் நடிகையான கேட் வின்ஸ்லட் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

சுமார் 300,000 பவுண்டுகள் சேர்த்து Gemmaவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நோய் குணமாவது போல் தோன்றினாலும் அது மீண்டும் மீண்டும் வந்தது. அறுவை சிகிச்சை முறையில் அவருக்கு குழந்தை பிறந்தது.

அதற்குப்பின் கருப்பை புற்று, மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் பரவிய நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என முயற்சி செய்தும் அவர் உயிரிழந்தது கேட் வின்ஸ்லட்டுக்கு பெரிதும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அடக்க ஆராதனையில் கலந்து கொண்ட கேட், கண்ணீர் மல்க, Gemmaவின் அடக்க ஆராதனையில் கலந்து கொள்வதை தான் கௌரவமாக கருதுவதாகவும், Gemma அதற்கு தகுதியுடையவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்