பொலிஸ் அதிகாரியால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையான 21 பேர்: 14 ஆண்டுகளுக்கு பின் அம்பலம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய காவல்துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் 21 சக ஊழியர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் கிளீவ்லேண்ட் காவல்துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றி ஓவுபெற்ற 53 வயது சைமன் ஹர்ட்வுட் என்ற நபர் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமது அலுவலக காலகட்டத்தில் சக ஊழியர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய பெண் பொலிசாரையே இவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பெண் ஒருவர் இவருக்கு எதிராக அனுப்பிய புகாரை அடுத்து கடந்த மாதம் இவர் கட்டாய ராஜினாமாவுக்கு நிர்பந்திக்கப்பட்டார். மட்டுமின்றி பொலிசார் இவரை கைதும் செய்தனர்.

3 பிள்ளைகளின் தந்தையும் இரண்டு முறை திருமணம் செய்தவருமான ஹர்ட்வுட் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.

புகார் தெரிவித்துள்ள சிலருடன் தாம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும், ஆனால் அது அவர்களின் ஒப்புதலுடனே எனவும்,

ஆனால் அவை அலுவலக நேரத்தில் அல்ல எனவும் அவர் வாதிட்டுள்ளார். தமது பதவியை பயன்படுத்தி பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாகவும் கூறப்படுகிறது.

குடும்ப சூழலால் நெருக்கடிக்கு உள்ளானவர்கள், தனிப்பட்ட விவகாரங்களால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே குறிவைத்து தமது வலையில் வீழ்த்தியுள்ளார்.

பெண்களிடம் நெருக்கமான நட்பை ஏற்படுத்திய பின்னர் அவர்களிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் கேட்டு நிர்பந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஹர்ட்வுட் தொடர்பில் சாட்சியம் அளித்த பெண் பொலிசார் ஒருவர், பணியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகள், படுக்கையில் என்ன செய்வாய்? உள்ளாடையின் நிறம் என்ன என்பது போன்ற கேள்விகள் கேட்டு தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உயரதிகாரி என்பதாலும், வேலையில் இருந்து வெளியேற்றிவிடுவார் என்ற பயத்தாலும் அவருக்கு உடன்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்ட்வுட்டுக்கு எதிராக புகார் அளித்துள்ள 21 பெண்களும், தங்களின் உள்ளாடை தொடர்பில் அதீத அக்கறை அவர் எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்