மூன்று வயது குழந்தையை மது குடிக்க வைத்த தாய்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

தன்னுடைய குழந்தைக்கு தாய் பாட்டிலில் இருந்த மதுவை குடிக்க வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையவாசிகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டின் Lanarkshire பகுதியில் கடந்த ஜுலை மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோ முதலில் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை தற்போது வரை 700,000 மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். அதில், பிங்க் நிற உடை அணிந்திருக்கும் தாய், தன்னுடைய கையில் இருக்கும் மது பாட்டிலை முதலில் குடிக்கிறார்.

அதன் பின் அவர் தன் அருகில் இருக்கும் 3 வயது மதிக்கத்தக்க குழந்தையை குடிக்க வைக்கிறார். இணையத்தில் இந்த வீடியோ வைரலானதால், இணையவாசிகள் பலரும் தங்களுடைய ஆத்திரமான கமெண்ட்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், இதுவும் ஒரு வகை துன்புறுத்தல் தான் என்றும் மற்றொரு இணையவாசி அந்த பெண்ணை பொலிசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்