லண்டன் நகரில் 21 இளைஞர்கள் குத்திக்கொலை: புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டன் நகரில் நடப்பாண்டில் மட்டும் 21 இளைஞர்கள் கத்தியால் குத்தியோ அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டோ கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் நடப்பாண்டில் மட்டும் 249 கத்திகுத்து சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டு நடந்த சம்பவங்களை விட இந்த வருடம் நடந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 3ம் தேதியன்று லண்டன் பகுதியில் ஹசன் ஒஸ்க்கான் என்ற இளைஞர் தான் முதன்முதலாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, சப்ரி சிபனி, 19, ப்ராமிஸ் நிக்கெண்டா, 17, லூயிஸ் பிளாக்மேன், 19, அபிக்ராரம் ஹசன், 17, கெல்வின் ஓடுனுய், 19 எனத்துவங்கி 21 இளைஞர்கள் குத்திகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த நவம்பர் 1ம் தேதியன்று ஜெய் செவெல் என்ற 15 வயது சிறுவன் குத்தி கொல்லப்பட்டான். அதற்கு மறுநாளே பெயர் வெளியிடப்படாத 12 வயது சிறுவன் குத்திகொல்லப்பட்டான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers