12 ஆயிரம் மக்கள் கூடியிருந்த இடத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து: 8 சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் புகழ்பெற்ற பூங்கா ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, திடீரென ஏற்பட்ட விபத்தில் 8 சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் ஒக்கிங் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று இரவு வாணவேடிக்கை நிகழ்வு நடந்தது. இதில் 12 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை காண ஆவலாக நின்று கொண்டிருந்தனர்.

அதேசமயம் சிறுவர்கள் சிலர் inflatable slide எனப்படும் சாதனத்தில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தனர். எதிர்பாரா நேரத்தில் திடீரென அந்த சாதனம் சரிந்து விழுவதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிடம் ஆரம்பித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஹெலிகாப்டர் உதவியுடன் காயமடைந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 8 சிறுவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், அந்த சாதனம் 30 அடி உயரம் கொண்டதாக இருந்தது. 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அதில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தான் திடீரென சரிந்து விழுந்தது. அதில் விளையாடிகொண்டிருந்த அனைத்து சிறுவர்களும் பயத்தில் அலறிக்கொண்டு கீழே விழுந்தனர் என தெரிவித்துள்ளார்.

இந்த சோக சம்பவத்தால் நடக்கவிருந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி, நடைபெறாமல் போய்விட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers