நான்கு பேரின் உயிரை காப்பாற்றிய உயிரிழந்த சிறுமி: மனதை உருக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த 9 வயது சிறுமி திடீரென உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் அவரின் உடல் உறுப்புகள் நான்கு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

Kent கவுண்டியை சேர்ந்தவர் ஸ்டீவர்ட். இவர் மனைவி கிளேர் பிரிஸ்டோ. தம்பதிக்கு சேடி பிரிஸ்டோ (9) என்ற மகள் இருந்தார்.

சேடிக்கு சிறுவயதிலிருந்தே உடல் அலர்ஜி பிரச்சனை இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கிளேர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். சுற்றுலா சென்ற இடத்தில் சேடிக்கு பெரியளவில் அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு சேடிக்கு பரிசோதனை நடந்த நிலையில் anaphylaxis என்ற உயிர் கொல்லி அலர்ஜி நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கான சிகிச்சையை சேடி எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சேடியின் பெற்றோர் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.

அதாவது, சேடியின் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் கல்லீரல் உயிருக்கு போராடும் நால்வருக்கு தானமாக தரப்பட்டது.

இதையடுத்து உடலுறுப்புகளை பெற்ற நால்வரும் உயிர் பிழைத்தனர்.

இது குறித்து சேடியின் பெற்றோர் கூறுகையில், மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக சேடி திகழ்ந்தாள்.

அவள் இறந்தும் நான்கு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது பெருமையாக உள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers