மெர்க்கல் தாய்க்கு அழைப்பு விடுத்த மகாராணி எலிசபெத்: எதற்கு தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை அரச குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காக இளவரசி மெர்க்கலின் தாய்க்கு, பிரித்தானிய மகாராணி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணம் கடந்த மே மாதம் நடைபெற்ற போது, மெர்க்கல் வீட்டின் சார்பாக அவருடைய தாய் மட்டுமே கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அதன்பின்னர் தற்போது விரைவில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில், சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் மெர்க்கலின் தாய் டோரியா ராக்லாண்ட் (62), கலந்துகொள்ளுமாறு மகாராணி எலிசபெத் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விழாவானது இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியினரின் வீடு அமைந்திருக்கும் சாண்ட்ரிகம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக இளவரசி மெர்க்கல் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers