குழந்தை பிறந்த அடுத்த நொடியே காதலை கூறிய நபர்: பிரசவ அறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காதலிக்கு குழந்தை பிறந்த மறு நொடியிலே, பிரசவ அறையில் வைத்தே தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த 25 வயது ஷோனா ஹொரோபினுக்கு தன்னுடைய முன்னாள் கணவன் மூலம் ஜேய்டென் (7), பிராங்கிய (5) மற்றும் பிரேயா (2) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

தன்னுடைய முதல் கணவரை பிரிந்த ஷோனா, 12 வருடன் நண்பனான ஜோர்டான் காஸ்கெல் (21) உடன் சேர்ந்து வாழ் ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதியினருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று லோட்டி என்ற மகன் பிறந்தான்.

குழந்தை பிறந்த மறுநொடியிலே ஜோர்டான் தன்னுடைய மகனுக்கு, "அம்மா என்னுடைய அப்பாவை திருமணம் செய்துகொள்வீர்களா?" என பொறிக்கப்பட்டிருந்த டிசர்ட்டை அணிவித்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து கையில் ஒரு வைர மோதிரத்தை நீட்டி திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers