நீச்சல் குளத்தில் மூழ்கிய இளவரசர் வில்லியம்: அதிர்ச்சியில் நீச்சல் உடையிலிருந்த இளவரசி டயானா செய்த செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியம் சிறுவயதில் நீச்சல் குளத்தில் குளித்தபோது மூழ்கியது போல நடித்த நிலையில், தாய் டயானா பதறியடித்து கொண்டு மகனை காப்பாற்ற முயன்றது தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசி மறைந்த டயானா குறித்து Diana: Her True Story என்ற புத்தகத்தை ஆண்ட்ரூ மோர்டன் என்பவர் எழுதியுள்ளார்.

இதில் டயானா குறித்து பலருக்கும் தெரியாத விடயங்கள் கூறப்பட்டுள்ளது.

புத்தகத்தின் ஒரு பகுதியில், டயானாவின் மகனான இளவரசர் வில்லியம் சிறுவனாக இருக்கும் போது தாயுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் குளித்ததாக கூறப்பட்டுள்ளது.

அப்போது நீச்சல் உடையுடன் குளித்த டயானா குளித்து முடித்தவுடன் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்போது குளித்து கொண்டிருந்த வில்லியம் தண்ணீரில் மூழ்குவது போல நடித்து நீருக்கு அடியில் சென்றுள்ளார்.

இதை பார்த்து பதற்றமடைந்த டயானா அப்படியே நீரில் குதித்துள்ளார்.

அப்போது நீரில் இருந்து வெளியில் சிரித்து கொண்டே வந்த வில்லியம் தான் நீரில் மூழ்குவது போல நடித்தேன் என செய்கையால் காட்டியுள்ளார்.

ஆனால் வில்லியமின் சுட்டித்தனத்தை டயானா ரசிக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers