வயது அதிகரிக்கும் அதிகரிக்க இளமைக்கு திரும்பும் அதிசய அழகி: வியந்து பார்க்கும் பொதுமக்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் வயது அதிகரிக்க அதிகரிக்க இளமைக்கு திரும்புவதாக, பொதுமக்கள் பலரும் ஆச்சர்யமாக கூறி வருகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆலிஸ் டாசன் என்ற 31 வயது தாய் சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

15 வயதில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய தோழிகள் பலரும் வியப்பில், வயது அதிகரிக்க அதிகரிக்க உனக்கு இளமை திரும்புகிறது. இது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்துள்ள ஆலிஸ், நான் ஒப்புக்கொள்கிறேன். முன்பு இருந்ததை விட நான் இப்போது இளமையாக தான் இருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலரும் நான் இளம் வயதிற்கு திரும்புவதாககூறிக்கொண்டே இருக்கின்றனர். தெருக்களில் நடந்து செல்லும்போது கூட நிறைய பேர் இளமையாக இருக்கிறேன் என கூறுகின்றனர்.

அதை கேட்கும்போதெல்லாம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதையே நானும் நினைத்து பார்ப்பது முட்டாள்தனமான காரியம். எனக்கு தெரியும் நான் வயதானவள் என்பது.

நான் இதுவரை மேக்கப் போட்டதில்லை. அது எப்படி போடுவது என்பது கூட எனக்கு தெரியாது. இளம்வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு வருகிறேன். அதிகமாக தண்ணீர் குடிப்பேன் என தான் இளமைக்கு திரும்பும் ரகசியம் பற்றி கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers