வாழ்விலும் சாவிலும் பிரியாத பிரித்தானிய தம்பதி: சோகப் பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வேலையிழந்து வீடிழந்த ஒரு தம்பதி சாகும்போதும் பிரிய விரும்பாமல் இணைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Melissa Wood (27) அவரது கணவர் Christopher Linley (34) இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

சில காலம் போதைப் பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து விடுபட இயலாமல் தவித்து, வேலையிழந்து பின்னர் தாங்கள் வசித்த வீட்டையும் இழந்து வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள் இருவரும்.

Doncaster ரயில் நிலயத்தில் உள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ள காட்சியில், ரயிலின் முன் குதிப்பதற்குமுன் இருவரும் கைகளைப் பற்றிக் கொண்டும் அணைத்துக் கொண்டும் நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அவர்கள் இறந்து சில நாட்களுக்குப்பின், தங்கள் குடும்பத்தினருக்கு அவர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதங்கள் கிடைத்தன.

அந்த கடிதங்களில் தாங்கள் இருவரும் எப்போதும் சேர்ந்தே இருக்க விரும்புவதாக அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.

வேலையிழந்த அவர்கள் பின்னர் தாங்கள் வாழ்ந்த வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டனர்.

தங்கள் போதைப் பழக்கத்திலிருந்து வெளியேற போராடிய அவர்கள் இருவரும் வாழ்வில் சேர்ந்திருந்ததோடு, வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்டபோது சேர்ந்தே உயிரை விடவும் முடிவு செய்து விட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்