ஜோடியை மாற்றிக்கொண்ட இளவரசர் சார்லசும் கமீலாவும்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய அரசின் சார்பில் ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக மேற்கு ஆப்பிரிக்கா சென்றுள்ள இளவரசர் சார்லசும் கமீலாவும் கானா அதிபர் வழங்கிய விருந்தில் கலந்து கொண்டனர்.

அப்போது இளவரசர் சார்லசின் மனைவியான கமீலா கானா அதிபருடன் இணைந்து நடனமாடினார்.

சற்றும் சளைக்காத இளவரசர் சார்லசும் கானா அதிபரின் மனைவியாகிய முதல் பெண்மணியுடன் நடனமாடினார்.

ஏற்கனவே பல தருணங்களில் தங்கள் நடன திறமையை இந்த ராஜ தம்பதியினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

கமீலாவோ நடன நிகழ்ச்சி ஒன்றின் நடுவரான Craig Revel Harwood உடனேயே நடனமாடியுள்ளார்.

நைஜீரியாவுக்கு செல்வதற்கும் முன் கானாவில் நடைபெற்ற கடைசி நிகழ்ச்சி இந்த ராஜ விருந்தாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers