அழுக்கு சாக்ஸை லட்சக்கணக்கில் விற்பனை செய்து பணக்காரியான பெண்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் தனது அழுக்கு சாக்ஸை விற்பனை செய்து பணக்காரி ஆகியுள்ளார்.

அழகான பாதங்களைக் கொண்ட ரொக்ஸி தனது அழகிய பாதங்களை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நம்ப முடியாத அளவிற்கு அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தார் .

பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தான் பயன்படுத்திய சாக்ஸை இணையத்தில் 20 யூரோவிற்கு (1600 ரூபாய்க்கு) விற்பனை செய்துள்ளார்.

இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தன் அழகிய பாதங்களில் அணிந்த சாக்ஸ்களை இணையத்தில் விற்பது என அவர் முடிவு செய்தார்.

முதல் மாதத்தில் மட்டும் 2000 யூரோவிற்கு தனது பயன்படுத்தப்பட்ட சாக்ஸ்களை விற்று பணம் சம்பாதித்துள்ளார். கடந்த 8 வருடங்களாக இதே தொழிலை செய்து வருகிறார்.

தற்போது மாதம் 8000 யூரோவிற்கு தனது அழுக்கு சாக்ஸை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை வைத்து பணக்காரி ஆகியுள்ளார்

அதாவது கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய்(இந்திய ரூபாய் மதிப்பீட்டின்படி) என ஆண்டிற்கு 98 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வருகிறார் .

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்