இளவரசர் ஹரியைக் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல மருத்துவர் ஒருவர் பிரித்தானிய இளவரசர் ஹரி தனது தலைமுடியை இழந்து வருவதாகவும் ஐம்பது வயதாகும்போது அவர் தலை வழுக்கையாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னும் பின்னும் பார்க்கும்போது இளவரசர் ஹரியின் உச்சந்தலையில் அதிகம் முடி கொட்டியுள்ளது தெரியவந்துள்ளது. அழகியல் மருத்துவரான Dr Asim Shahmalak, 34 வயதான இளவரசர் ஹரி தனது தலைமுடியை

வேகமாக இழந்து வருவதால் ஐம்பது வயதாகும்போது அவர் எவ்வாறு இருப்பார் என்பதை கற்பனையாக ஒரு படமாக வெளியிட்டுள்ளார்.

ஹரியின் முடி கொட்டுதலுக்கு காரணம் ஜீன் என்றால் அவரது தாத்தா பிலிப், தந்தை சார்லஸ், அண்ணன் வில்லியம் போல அவரும் வழுக்கையாகிவிடுவார் என்கிறார் Dr Asim Shahmalak.

ஆனால் தனது தலைமுடி கொட்டுவதைக் குறித்து ஹரி சிறிதளவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று கூறும் அவர், வாழ்க்கையில் நல்ல துணையை அடைந்தவர்கள் அதைக் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

அதேபோல் தனது தலைமுடி குறைவது பளிச்சென்று தெரியாமல் இருப்பதற்காகவே ஹரி ஒரு வேளை தாடி வளர்க்கலாம் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers