கடும் காற்றுடன் பலத்த மழை : பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை!

Report Print Kavitha in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலவி வரும் காலநிலை காரணமாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்துக்கு மஞ்சள் வானிலை அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை இன்று தீவிரமடைந்துள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக சில ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மணிக்கு 70 மீற்றர் வேகத்தில் காற்று பலமாக வீசி புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு, மின்சார துண்டிப்பு மற்றும் சில வீதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக, எதிர்வரும் சில நாட்களுக்கு இந்த சீரற்ற காலநிலை நீடிக்குமெனவும் காற்றின் வேகம் நாளைய தினம் கடுமையாகலாமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers