பிரபல நடிகைக்கு முத்தமிட மறுத்த இளவரசர் வில்லியம்: சுவாரஸ்ய சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நேற்று முன் தினம் பிரித்தானியாவின் பிரபல நடிகையும், திரைக்கதை எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், எழுத்தாளரும், நகைச்சுவையாளருமான Emma Thompsonக்கு பிரித்தானிய அரசு Damehood என்னும் உயர் பட்டமளித்து கௌரவித்தது.

அந்த பட்டத்தை பிரித்தானிய இளவரசர் வில்லியம் Emmaவுக்கு வழங்கினார்.

அந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியின்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. நடிகை Emma தனக்கு பட்டம் வழங்கிய இளவரசர் வில்லியமிடம், நான் உங்களை முத்தமிடலாமா? என்று கேட்க சட்டென்று, இல்லை, வேண்டாம் என்று கூறி பின்வாங்கிய இளவரசர், பின்னர் சுதாரித்துக் கொண்டு, இந்த நாள் எனக்குரியது அல்ல, அது உங்களுக்கானது என்று கூறி சமாளித்தார்.

இந்த சம்பவத்தை பின்னர் பகிர்ந்து கொண்ட நடிகை Emma, இளவரசர் கையால் பட்டம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

Emma சிறு வயதிலிருந்தே இளவரசர்கள் இருவருக்கும், அவர்களது தந்தையான இளவரசர் சார்லசுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Emma இளவரசர் வில்லியமை சிறுபிள்ளையாக இருக்கும்போதே நன்கறிந்தவர் என்றாலும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் முத்தமிடுவது விதிகளுக்கு முரணானது என்பதால்தான் அவர் முத்தமிட மறுத்துவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers